×

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன!!

சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் சராசரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதலில் தபால் வாக்கு

முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.முதலில் தபால் வாக்குகளும் பின்னர் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

* மேற்கு வங்கம், அசாம், கேரளா உட்பட 4 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்துடன் சேர்ந்து மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரிக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதியும், அசாமில் அதற்கும் முன்பும் தேர்தல் முடிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகதேர்தல் நடத்தப்பட்டதால், அது கடந்த மாதம் 29ம் தேதிதான் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இன்று இம்மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

Tags : Tamil Nadu , தேர்தல்
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து