×

கலாஷேத்ரா விவகாரம், பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம்: மாணவிகள் திட்டவட்டம்

சென்னை: பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி மாணவிகள் கூறிய 4 பேராசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை வாய்மொழி மூலமாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் வரை தேர்வெழுதப் போவதில்லை என்றும் கல்லூரி நிர்வாகத்திடம் நடந்த பேச்சுவார்த்தையில் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் புகாருக்குள்ளான பிற 3 பேரை டிஸ்மிஸ் செய்வதற்கான ஆணை 2 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தரப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.

The post கலாஷேத்ரா விவகாரம், பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை எழுத்துப்பூர்வமாக அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம்: மாணவிகள் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai… ,Kalashetra ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...