தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள், முகவர்கள் எங்கே வாகனங்களை நிறுத்தலாம்? போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்தள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: லயோலா கல்லூரி நுங்கம்பாக்கம் வாக்கு என்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் லிபா நுழைவு வாயில் அருகே உள்ள மைதானத்திலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களை லயோலா கல்லூரி உட்புறமும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை காந்திசிலை அருகே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களை ராணிமேரி கல்லூரி உட்புறம் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் காந்திமண்டபம் உட்புறம் மற்றும் பிர்லா பிளானட்டோரியம் உட்புறம் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களை அண்ணா பல்கலைகழகம் அருகில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலக உட்புறம் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை கிறிஸ்துவ கல்லூரி கிழக்கு தாம்பரத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்திலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களை சென்னை கிறிஸ்துவ கல்லூரி உட்புறமும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>