கொரோனாவுக்கு தயாரிப்பாளர் பலி

சென்னை: தமிழில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்து வெளியான படம், யாக்கை. இப்படத்தின் தயாரிப்பாளர் முத்துக்குமரன் சுப்பிரமணியன் (47), சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று அவர் மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

Related Stories:

>