கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை, உதவி மைய எண்கள்: தொழிலாளர் துறை ஏற்பாடு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர் களுக்கு உதவ கட்டுப் பாட்டு அறை, உதவி மைய எண்களை தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள், தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யவும், தொழிலாளர் துறையில் மாநிலக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டு அறையை, 044-24321438 044-24321408 ஆகிய அவசர உதவி எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

* மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைபேசி எண்கள்:

காஞ்சிபுரம் மாவட்டம்: எஸ்.நீலகண்டன்,9445398743, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), காஞ்சிபுரம், .த.கமலா,9922639441, தொழிலாளர் துணை ஆய்வர், காஞ்சிபுரம், பா.மாலா,9790566759, தொழிலாளர் உதவி ஆய்வர், காஞ்சிபுரம் த.பொன்னிவளவன்,9889253410, தொழிலாளர் உதவி ஆய்வர், மதுராந்தகம், .ஆ.சண்பகராமன்,9940825855, தொழிலாளர் உதவி ஆணையர்(ச.பா.தி), செங்கல்பட்டு மாவட்டம்: ரா.சு.மனுக் ஷ்யாம் ஷங்கர்-8667570609, தொழிலாளர் துணை ஆய்வர், பரங்கிமலை, -ஆர்.பிரபாகரன்- 9944214854, தொழிலாளர் உதவி ஆய்வர், செங்கல்பட்டு, ம.வெங்கடேசன்- 8870599105 தொழிலாளர் உதவி ஆய்வர், தாம்பரம், வெ.சிவசங்கரன் - 9444152829, தொழிலாளர் உதவி ஆய்வர், பரங்கிமலை. என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Related Stories:

>