தெற்கு ரயில்வே அறிவிப்பு முன்பதிவு மையங்கள் இன்று இயங்காது

சென்னை: பயணிகள் முன்பதிவு மையங்கள் இன்று இயங்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக இன்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து பயணிகள் முன்பதிவு மையங்களும் அன்றைய தினம் இயங்காது. டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும் நடப்பு முன்பதிவு கவுண்டர்கள் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>