கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு கொரோனாவை கையாள்வதில் மோடி அரசு தோற்றுவிட்டது

சென்னை: கொரோனாவை கையாளுவதில் மோடி அரசு தோற்று போய்விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சி கொடியை, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றினார். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் மே தின வாழ்த்துக்கள். இந்தியாவில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. உயிரை அச்சுறுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கையாள்வதில் மோடி அரசு தோற்று போய் உள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கருத்து கணிப்பின் படி அதிமுக-பாஜக படுதோல்வி அடைந்து, திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

Related Stories:

>