தமிழகத்தில் மரங்களை பாதுகாப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க வழக்கு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வனப்பாதுகாப்பு சட்டம், காற்று மாசு தடுப்பு சட்டம், நீர் மாசு தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் இருந்தாலும் தமிழகத்திலும், மத்தியிலும் மரங்களை பாதுகாக்க தனி சட்டங்கள் இல்லை. ஆனால், கர்நாடகா, டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மரங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களின்படி, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க தனி சட்டம் இல்லாததால் மரங்கள் வெட்டப்படுவது தொடர்கிறது. அதன் காரணமாக அரியவகை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனவே, தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க நிபுணர்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, தமிழக உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை, பொதுப்பணித்துறை செயலாளர்களையும், டிஜிபியையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, மரங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

>