சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாத 765 பேர் மீது வழக்கு ரூ.1,56,100 அபராதம்: இதுவரை ரூ.45,99,400 வசூல்

சென்னை: கொரோனா தொற்றுவிதிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது  காவல் துறை அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் முகக்கவசம் அணியாமல் சுற்றியதாக 752 பேர் மீது வழக்குபதிவு செய்து ரூ.1,49,600 வசூலிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 8ம் தேதி முதல் 29ம் தேதி வரை 24,409 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. அதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என 13 பேர் வழக்கு பதிவு செய்து ரூ.6,500 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 8ம் தேதி முதல் நேற்று வரை 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,90,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வரை முகக்கவசம் அணியாத 22,355 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து 6 லட்சத்து 84 ஆயிரத்து 299 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்துக்காக 748 பேர் மீது 21 ஆயிரத்து 404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>