×

மகனின் விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் ஒற்றை சிறுநீரகத்துடன் கொரோனாவை வென்ற தாய்: மருத்துவர்களே தயக்கம் காட்டிய நிலையில் அதிசயம்

மும்பை: மகாராஷ்டிராவில் மகனின் விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் ஒற்றை சிறுநீரகத்துடன் கொரோனாவால் பாதித்த தாய், அந்த தொற்றில் இருந்து மீண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மேகா அரவிந்த் பண்டக்கர் (56) என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகம் செயலிழந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு ஒரே ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 அன்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. கொரோனாவை பரிசோதித்த பின்னர், அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் படுக்கை வசதிகள் கிடைக்காததால், சில நாட்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும், அவரது நுரையீரல் தொற்று 50 சதவீதம் அளவிற்கு அதிகரித்தது.

இக்கட்டான இந்த நேரத்தில் அவரது மகன் நிதீஷின் கடின உழைப்பு, தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்ற தன்னம்பிக்கையால், கடந்த ஏப்ரல் 1ம் தேதி சத்ரபதி சவுக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேகா அரவிந்த் பண்டக்கர் அனுமதிக்கப்பட்டார். அவரது ஒற்றை சிறுநீரக செயல்பாட்டை அறிந்த மருத்துவர்கள், அவருக்கு மருத்துவம் பார்க்க தயக்கம் காட்டினர். இருப்பினும், மேகா பண்டக்கர் தனது நம்பிக்கையை கைவிடவில்லை. தான் முற்றிலும் முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவதில் உறுதியாக இருந்தார். அதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிைடயே மேகா பண்டக்கரின் 82 வயதான புஷ்பதாய்க்கு உடல்நலம் குன்றியது.

அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்கள் தாயும், மகளும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின், பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இருவரது அசாத்திய நம்பிக்கையை பார்த்து வியப்படைந்த மருத்துவர்,  அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து மேகா அரவிந்த் பண்டக்கர் கூறுகையில், ‘கொரோனா பாசிடிவ் என்று வந்த போது, நான் கவலைப்படவில்லை. ஒரே ஒரு சிறுநீரகம்  மட்டுமே செயல்பாட்டில் உள்ள நிலையில், எனக்கு கொரோனா வந்ததை கண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திகிலடைந்தனர். இருப்பினும், நான் நலம் பெறுவேன்  என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் மகன்  மிகவும் கவலையுற்றான். மருத்துவர்களே தயங்கிய நிலையில், ஒற்றை சிறுநீரகத்துடன் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளேன். வழக்கமான அளவு மருந்துகள் மற்றும் சரியான உணவு மூலம், எனது உடல்நிலை ஒரு வாரத்திற்குள் முன்னேற்றம் அடைந்தது. அடுத்த சில நாட்களில் அவர் தொற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தேன்’ என்று தெரிவித்தார்.

Tags : Mother who won the corona with a single kidney due to her son's perseverance and self-confidence: The doctors' reluctance is a miracle
× RELATED நடப்பதை உன்னிப்பாக கவனித்து...