கருத்துக்கணிப்புகள் உண்மையாகி தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி!: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை..!!

சிவகங்கை: கருத்துக்கணிப்புகள் உண்மையாகி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைவது உறுதி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு மிகப்பெரிய கடன்சுமையை வைத்துவிட்டு செல்வதாகவும், அந்த பெரும் சவாலை புதிய அரசு சமாளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்புகள் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் உண்மையாகும் என்றும்  திமுக ஆட்சி அமைவது உறுதி என்றும் அவர் கூறினார். 

வாக்கு எண்ணிக்கையில் இழுபறி வர வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனாவை கையாண்ட விதத்தில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கொரோனாவை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து பிரதமர் பேச மறுப்பதாகவும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். ப.சிதம்பரம் செய்தியாளர்களிடையே பேசியதாவது, கருத்துக்கணிப்புகள் தங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 

கருத்துக் கணிப்பை நடத்தியவர்களுக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையிலேயே கருத்துக்கணிப்புகள் அமைந்துள்ளது. நாளைய வாக்கு எண்ணிக்கை கருத்து கணிப்புகளை உறுதி செய்யும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். 

Related Stories:

>