ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி மனோஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வாளையார் மனோஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு  எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது.

அந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிலையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் குற்றவாளிகள் 10 பேரில் 8 பேருக்கு ஜாமின் கிடைத்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான் மற்றும் மனோஜ் சிறையில் இருந்தனர்.

இந்தநிலையில் சிறையில் இருந்த வாளையார் மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் கடந்த 28- ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான வாளையார் மனோஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>