கோடையில் தாகத்தை தீர்க்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பு: திருவாரூரில் ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்

திருவாரூர்: கோடையில் தாகத்தை தீர்க்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை திருவாரூரில் படுஜோராக நடக்கிறது. அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கூடுதலாக உள் ளது.. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரும் போது மக்கள் குளிர் பானங்கள், பழரசங்கள் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

தர்பூசணி பழங்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப் புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டு பல்வேறு மாவட்ட ங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப் பாக திண்டிவனம் பகுதியில் இருந்து வரும் தர்பூசணி நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். திண்டிவனத்தில் இருந்து லாரிகள் மூலம் வரும் தர்பூசணி பழங்கள் திருவா ரூரில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் ஆர்வத் துடன் வாங்கி செல்கின்றனர். திருவாரூர் கமலாய குளக்கரை உள்பட நகரில் எங்கு பார்த்தாலும் தர்பூசணி பழங்களின் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. ஏராளமான தள்ளு வண்டிகள் மற்றும் மரத்தடிகளில் இந்த பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி சுவைத்து வருகின்றனர். கோடை வெயிலை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.

இது குறித்து இயற்கை ஆர்வலர் வரதராஜன் கூறுகையில், உடல் நலத் திற்கு அதிகளவில் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதில், ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது. தர்பூசணியில் இயற்கையாகவே இரும்பு சத்து நிறைந்துள்ளது. தினம்தோறும் ஒரு துண்டு தர்பூசணி சாப்பிட்டு வந்தால் நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும் என்றார்.

Related Stories:

>