×

நாளை தேர்தல் வாக்கு எண்ணிக்கை...தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொபர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்தியா தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 8 மணியளவில் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கொரோனா வழிமுறைகளை பின்பற்றி முகவர்களுக்காக அனுமதி அளிப்பது, ஊடகத்துறைக்கான அனுமதி அளிப்பது, காவல் துறைக்கான பாதுகாப்பு கொடுப்பது எப்படி என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல உள்ளே வருபவர்களுக்கான வசதி ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையை எப்படி அறிவிப்பது தொடர்பான அனைத்து விதமான ஏற்பாடுகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் 3996 பேர் வேட்பாளராக இருக்கிறார்கள். அவர்களுக்கான முகவர்கள் கொரோனா நெகடீவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஒரு சில முகவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மாறாக வேறு முகவர்கள் வர இருக்கிறார்கள். தமிழகத்தில் தலைமை தேர்தல் சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


Tags : Election Commission of India ,Election Commission , Election vote count, Chief Electoral Officer, sudden consultation
× RELATED வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை...