குஜராத் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து.! உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு.!! நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் பாரூச் என்ற இடத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பாரூச் நகரில் படேல் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா சிகிச்சை மையத்தில் நள்ளிரவில் 12.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ விபத்தில் பலத்த காயமடைந்த கொரோனா நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிதிவுதவி:

குஜராத் பாரூச் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள், மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>