உயர்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு கொரேனா: அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவும் அபூர்வா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளராகவும் அபூர்வா செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக தீரஜ் குமார் விடுப்பில் இருக்கும் நிலையில் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பல பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளை ஆட்டி வலைக்கிறது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

Related Stories:

>