578 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை தர அனுமதி: கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கை ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள்  அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு போல், தற்போது பல தனியார் மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சைக்கு போதிய படுக்கைகளை ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் தனியார் மருத்துவமனைகள் ஒதுக்கவில்லை. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:  கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளும் பங்கேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததையடுத்து அரசு தரப்பிலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை உரிய வழிகாட்டு நடைமுறைகளுடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 578 தனியார் மருத்துவமனைகள் ெகாரோனா சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளதாகவும் அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம் எழுதினார்.

அதில் தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள மொத்த படுக்கைகளில் 50 சதவீதத்தை கொரோனா சிகிச்சைக்கு கொடுக்க முன்வந்துள்ளதாக கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 578 தனியார் மருத்துவமனைகள் 50 சதவீதம் படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கலாம். குறிப்பிட்ட அளவில் ஆக்சிஜன் படுக்கைகள் இருக்க வேண்டும். அதேபோல், திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>