×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை: தேவையின்றி ரெம்டெசிவிர் பரிந்துரை மருத்துவத்துறை மூலம் நடவடிக்கை

சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவருக்கும் ரெம்டெசிவிர்  மருந்து தேவைப்படாது. ஆபத்தான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது.  ரெம்டெசிவிர் மருந்துக்காக எல்லா மக்களையும் அலைக்கழிக்க வேண்டாம். அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின்  அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும். இது மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனை, புதுச்சேரியில் யாரும்  ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும்  அரசாங்கம் மூலமாக மருந்து வழங்கப்படுகிறது.

தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்பவர்கள் மீது மருத்துவத்துறையின் மூலம் கண்காணிப்பும்,  நடவடிக்கைகள் எடுக்க நேரிடும். கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனைகள் கொரோனா  நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை மருத்துவமனையின் மூலமே ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை பெற வருபவர்களிடம் மருந்தை வாங்கி வரச்சொல்லி அலைக்கழிக்க கூடாது. மேலும் அரசாங்கம் மூலமாக  வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து முறையான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா  என்பதை மருத்துவ தணிக்கை குழு மூலம் கண்காணிக்கப்படும்.

Tags : Puducherry ,Deputy Governor , Pondicherry Deputy Governor Tamil Music Action by Remdecivir Recommended Medical Department without warning
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...