துரத்தி துரத்தி தாக்கும் கொரோனா பயந்து ஓடும் மெகா கோடீஸ்வரர்கள்: அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பாதுகாப்பான இடங்களில் குடும்பத்துடன் தஞ்சம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமல்ல. உலக நாடுகளையே புரட்டி போட்டு வருகின்றது. சாமானியர்கள் முதல்  கோடீஸ்வரர்கள் வரை ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அடிமட்ட கூலி தொழிலாளி முதல்  அதானி, அம்பானி வரை அஞ்சி நடுங்க வைத்து வருகிறது. போக்கிடம் இன்றி சாமானியர்கள் தவித்து வருகின்றனர். அதே நேரம், பல பெரிய பணக்காரர்கள் கொரோனாவுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தனி விமானங்களில் தப்பிச் செல்கின்றனர்.

கடந்த மாதம்  மும்பை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட பெரிய நகரங்களை சேர்ந்த பணக்காரர்கள், லண்டனில் இந்திய விமானங்ளுக்கு தடை விதிக்கும்  முன்பாக குடும்பத்துடன் இங்கிலாந்து சென்று பதுங்கி விட்டனர்.  தற்போது, இந்தியாவின் உலக மகா கோடீஸ்வரர்களும் பாதுகாப்பான நகரங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். ஆங்காங்கே  வாங்கியும், கட்டியும் வைத்துள்ள அலங்கார விடுதிகளும், அடுக்கு மாடி கட்டிடங்களும் இப்போது அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.

நகரங்களை தேடி படையெடுத்த காலம்போய், நகரங்களில் இருந்து வெளியே இருக்கும் வீடுகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில்  பல லட்சம், பல ஆயிரம் கோடிகளை முதலீடுகளாக கொண்ட பெரும் முதலாளிகள், இப்போது வழக்கமாக அவர்கள் வாழும் இடங்களில் இல்லை.  யார், யார் எங்கெங்கே இருக்கின்றனர் ஒரு சிறிய தகவல்கள் இதோ...இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘நான் எனது குடும்பத்தினர் மற்றும்  ஊழியர்களுடன் வீட்டிற்குள்ளேயே இருக்கிறேன். இதுதான் எனது கதை,’ என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘எனது நபர்களுடன்  தொடர்பு கொள்வதை துண்டித்துள்ளேன். வெளியே நட்சத்திர ஓட்டல்களில் இருந்து  உணவுகளை வாங்குவது கிடையாது.

வீட்டில் சமைத்த  உணவை மட்டுமே சாப்பிடுகிறேன்,” என்றார். இந்த நிறுவனத்தின் மற்றொரு இணை தலைவரான நந்தன் நைல்கானி, தனது குடும்பத்தினருடன்  தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  கற்பித்தலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூ ரவீந்திரன்,  பெங்களூரில், எச்எஸ்ஆர் லேவுட்டில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் இருக்கிறார். இது யூனிகான் ரோ என பிரபலமாக அழைக்கப்படுகிறது.  இது, ரூ.750 கோடிக்கும் அதிகமான மதிப்புடையது.

இதேபோல், இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய பணக்காரர்கள் மிக குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று  விட்டனர். ஏனெனில், தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தக நகரமான மும்பையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது. மும்பையில் மிகப்பெரிய வீட்டில் வசித்து வந்த ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்துடன் குஜராத்துக்கு இடம்  பெயர்ந்துள்ளார். அங்கு, ஜாம்நகரில் இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மிகப்பெரிய இரட்டை எண்ணெய் சுத்திகரிப்பு  வளாகத்தில் உள்ள நகரத்தில் உள்ள பிரமாண்ட பங்களால் அவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். வெளியாட்கள் யாருக்கும் அங்கு அனுமதி  கிடையாது. இதேபோல், இந்தியாவின் 2வது பணக்காரரான அதானி நிறுவனத்தி–்ன் தலைவர் கவுதம் அதானி, தனது மகன் கரன் அதானி மற்றும் நெருங்கிய  குடும்ப உறவுகளுடன் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நகருக்கு சென்றுவிட்டார்.

Related Stories: