×

இந்தியாவுக்கு 40 நாடுகள் உதவி அமெரிக்க மருத்துவ பொருட்கள் வந்தன

புதுடெல்லி: கொரோனாவிடம் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு, 40ககும் மேற்பட்ட உலக நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன.  அமெரிக்கா அனுப்பிய மருத்துவ பொருட்களை ஏற்றிய விமானம் நேற்று வந்து சேர்ந்தது. கொரோனாவின் தாக்குதலால் கடுமையாக பாதித்துள்ள இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன. ரஷ்யா நேற்று  முன்தினம் 2 விமானங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை அனுப்பி வைத்தது.  இந்நிலையில், ‘கொரோனா நோய் தொற்று முதல் அலையின்போது இந்தியா எங்களுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பி உதவியது. இந்த  இக்கட்டான நேரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்காவும் உதவும்,’ என்று அந்நாட்டுஅதிபர் ஜோ பைடன்  தெரிவித்தார்.

இந்நிலையில், பல்வேறு மருத்துவ உதவிப் பொருட்களை அமெரிக்கா நேற்று தனி விமானத்தில் அனுப்பி வைத்தது. டெல்லி வந்த இந்த  விமானத்தில், 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கொரோனா பரிசோதனை கருவிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை உள்ளன.  இது  தொடர்பாக, அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் இருந்து அவசர கால மருத்தவ பொருட்கள் இந்தியா  வந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான 70 ஆண்டு கால ஒத்துழைப்பை வலுப்படுத்த, கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு  அமெரிக்கா துணை நிற்கும்,’ என கூறப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க  நிறுவனங்கள், தனிநபர்கள் அளித்த நன்கொடையாக மருத்துவ உபகரணங்கள் ஏற்றிய சிறப்பு விமானம் அடுத்த வாரம்  இந்தியா வரும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா, அமெரிக்கா மட்டுமின்றி, 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள்  இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.



Tags : US ,India , 40 countries received US medical supplies to India
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!