×

தேர்தல் ஆணையம் யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணியக் கூடாது: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: தேர்தல் ஆணையம் யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் செயல்பட வேண்டும் என்று முத்தரசன் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி:
கருத்துக்கணிப்பு வெற்றியை காட்டிலும் மேலும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.இந்த நேரத்தில் நாங்கள்  தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்வது என்னவென்றால், நாட்டு மக்கள் நாடாளுமன்ற தேர்தல் மூலமாக ஜனநாயக மூலமாக தாங்கள்  விரும்புகிற ஒரு கட்சியை வெற்றி பெறச் செய்து அதற்கான வாய்ப்பை மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். அந்த மக்களுடைய உணர்வுகளை  காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்புதேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திரமாக  செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம் யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் செயல்பட வேண்டும்.  ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகுதான் அடுத்த சுற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஒவ்வொரு  வேட்பாளரும் பெற்ற வாக்குகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். தேர்தல் அதிகாரி அந்த வாக்கு எண்ணிக்கையை அங்கிருக்கிற  கரும்பலகையில் எழுதுவது மட்டுமில்லாமல், பகிரங்கமாக ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்க வேண்டும். அடுத்து இரண்டாவது சுற்றுக்கு ஏற்பாடு  செய்ய வேண்டும். அப்போதுதான் குழப்பம் இல்லாமல் ஒரு தெளிவான முடிவாக இருக்கும். இந்த நடைமுறைகளை தேர்தல் ஆணையம்  பின்பற்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Electoral Commission ,Trilesman , Election Commission should not submit to anyone's compulsion: Mutharasan interview
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...