பாளை சிறையில் கொலையான கைதியின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும்: குடும்பத்தினருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துமனோ (27). தேவேந்திர குல வேளாளர்  கூட்டமைப்பின் மாவட்ட இளைஞரணித் தலைவரான இவர், கொலை மிரட்டல் வழக்கில் களக்காடு போலீசால் கைது செய்யப்பட்டார்.  திருவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்த முத்துமனோ திடீரென பாளை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையினுள் நடந்த ேமாதலில்  கடந்த ஏப். 22ல் கொலை செய்யப்பட்டார்.

இந்த ெகாலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும், இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும், முத்துமனோ உடலை பெறாமல் அவர்களது  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு  மாற்றியது. விதிகளை பின்பற்றி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டுமென  உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி விதிகளை  பின்பற்றி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இழப்பீடு மற்றும் அரசு வேலை தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு  சட்டப்படி ரூ.4.12 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனாலும் உடலை பெற்றுக் கொள்ள  மறுத்துபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட முத்துமனோவின் உடலை  மே  1க்குள் (இன்று) அவரது பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>