×

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தவர்கள் 2 முறை கொரோனா தடுப்பூசி போட வேண்டும்

சென்னை,: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மை செயலாளர் நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கை: சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் மற்றும் ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மின்அஞ்சலின்படி, சவூதி அரேபியாவிற்கு  வருகை தரும் புனித பயணிகள் புறப்படுவதற்கு முன் இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று மும்பை, இந்திய ஹஜ் குழு  தெரிவித்துள்ளது. இந்திய பயணிகள் ஹஜ் 2021-ல் புனித பயணம் மேற்கொள்ள நேரிட்டால், ஜூன் மாத மத்தியில் இருந்து புறப்பாடு விமானங்கள்  இயங்கும்.

விண்ணப்பித்தவர்கள் இப்போது தாங்களாகவே முதல் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும்  புறப்படும் நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி அவர்களுக்கு அளிக்கப்படும். எனவே, பயணத்தில் இடையூறு  ஏற்படாவண்ணம் இருக்க  பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தி கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹஜ் - 2021 தொடர்பான  அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் சவூதி அரசிடம் இருந்து இதுவரை பெறப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தொடர்ந்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி (நாளை) எண்ணப்பட  உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற  நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும்  அளித்த புகாரை  பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டது.



Tags : Hajj , Applicants for Hajj must be vaccinated 2 times with Corona
× RELATED ஹஜ் மாநாடு ஸ்மிருதி இரானி பங்கேற்பு