×

இபிஎஸ்சுக்கு செக்..அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் மனு

சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் அளித்துள்ள புகார் மனுவில், பொதுச் செயலாளர் தேர்வை தடை செய்யவும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பதவி வகிக்க தடை கோரியும் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது. தங்கள் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை கட்சி விதிகளில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள கூடாது என்றும்உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேர்தல் சின்னம் ஒதுக்க அளிக்கப்படும் ஏ,பி, படிவங்களில் கையெழுத்திட பழனிசாமியை அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிமுக கட்சிக்கு இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அதிமுக உத்தரவு அட்டையை மீண்டும் இணையதளம் மூலம் விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post இபிஎஸ்சுக்கு செக்..அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : EPS ,General Secretary ,ADMK ,Election Commission ,Chennai ,Edappadi Palaniswami ,AIADMK ,General ,Lawyer ,Ram ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...