×

கன்னியாகுமரி - பெங்களூரு ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்: டிக்கெட் பரிசோதகர் தலைமறைவு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி - பெங்களூரு இடையே ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி, கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஊருக்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து இந்த ரயிலில் பயணித்தார். அவருக்கு சாதாரண பெட்டியில் தான் இடம் கிடைத்தது. இளம்பெண் ஏசி பெட்டியில் பயணம் செய்ய விரும்பினார். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் ஜாண்சனை (54) அணுகி உள்ளார்.

அப்போது சிறிதுநேரம் கழித்து, ஏசி பெட்டிக்கு மாற்றித்தருவதாக டிக்கெட் பரிசோதகர் கூறி இருக்கிறார். இதை நம்பிய இளம்பெண் அவரிடம் சகஜமாக பேசி உள்ளார். இந்த நிலையில் இளம்பெண்ணிடம் வந்து அமர்ந்த ஜாண்சன், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார். அப்போது திடீரென இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதோடு, ஆபாசமாக பேசி, கட்டிப்பிடிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வேறு இருக்கைக்கு ெசன்று விட்டார்.
இந்த நிலையில் ரயில் திருவல்லாவை வந்தடைந்தது. தொடர்ந்து ரயிலில் இறங்கிய இளம் பெண் ரயில் நிலையத்தில் தனக்காக காத்திருந்த விவரத்தை கூறி உள்ளார்.

அதன் பிறகு 2 பேரும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தனர். அவர் உடனே எர்ணாகுளம் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்த நிலையில் ரயில் எர்ணாகுளம் வந்தடைந்தது. உடனே ரயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகர் ஜாண்சனை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகு போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே ஜாண்சனுக்கு எதிராக எர்ணாகுளம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை அறிந்த ஜாண்சன் தலைமறைவானார். பின்னர் முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் ெசய்தார்.

மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது போலீசார் ஜாண்சனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kanyakumari ,Bangalore ,silmisham , Kanyakumari - Bangalore train girl scolded: Ticket inspector absconds
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!