×

'புதுவையில் தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள்' !: துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தகவல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 3ம் தேதி வரை பார்த்துவிட்டு தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும் என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் கூடுதல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார். மேலும் படுகைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் போதுமான அளவு மருத்துவ ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பொதுமக்கள் அத்தியாவசியம் இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது, கொரோனாவை ஒழித்துக்கட்ட அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம். புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் இருந்து சில மருத்துவர்களை அரசாங்க மருத்துவமனைக்கு உதவி புரிய அழைப்பு விடுத்துள்ளோம்.

படுக்கை வசதிகளை விரிவுபடுத்தியுள்ளோம். ஆக்சிஜன் படுகைகளை அதிகப்படுத்தியுள்ளோம். அதேபோல் எல்லா தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள படுகைகளை கொரோனாவிற்காக அதிகரிக்க வலியுறுத்தியுள்ளோம். புதுவையில் வருகின்ற 3ம் தேதி வரை பார்த்துவிட்டு தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டார்.


Tags : Deputy Governor ,Tamilisai Soundarajan , Puduvai, Control, Tamilisai Soundarajan
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...