திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..!

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளன. எல்லா கருத்து கணிப்புகளிலும் திமுக கூட்டணி குறைந்தது 160 முதல் 190 இடங்கள் வரை பிடிக்கும் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக தேர்தல் நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். நாளை மறுநாள் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி தேர்தல் நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தநிலையில் நாளைமறுதினம் மாநிலம் முழுவதும் 75 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளில் திமுகவினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தேர்தல் ஆணைய உத்தரவுகளை கடைப்பிடிப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர், வேட்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் வழங்கும் ஆலோசனையை பின்பற்ற மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>