×

2 நாட்கள் இறைச்சி கடைகள் மூடல்!: சென்னை காசிமேட்டில் இன்றே மீன் வாங்க குவிந்த கூட்டம்..திருவிழா போல் காட்சி..!!

சென்னை: நாளை சனிக்கிழமை, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மீன் விற்பனை கடைகள் மூடப்படுவதால் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க இன்றே மக்கள் குவிந்தனர்.சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டாலும் பாதிப்பு என்பது கணிசமாக உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் இறைச்சி கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதது. இந்நிலையில் சென்னை காசிமேடு மீன் சந்தையில் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 


மே 1ம் தேதி மற்றும் 2ம் தேதி 2 நாட்களும் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அசைவம் சமைக்கும் மக்கள், மீன்களை வாங்க இன்றே காசிமேட்டில் குவிந்தனர். அதிகாலை முதலே ஏராளமான கூட்டம் குவிந்து காசிமேடு மீன்சந்தை பகுதியே திருவிழா போன்று காட்சியளித்தது. இதனால் மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 


தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் மீன் விற்பனை செய்பவர்களுக்கும், மீன் வாங்க வரும் பொதுமக்களுக்கும் காசிமேடு மீன்பிடித்துறை போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அதே நேரத்தில் சமூக இடைவெளி மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி இருப்பதாக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 



Tags : Chennai Casemate , Meat shop, Kasimedu, fish, crowd
× RELATED சென்னை காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பெண் உட்பட 4 பேர் கைது