திம்மசமுத்திரம் கொள்ளை வழக்கு: உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் சித்தேரிமேடு கிராம மக்கள், டிஎஸ்பி மணிமேகலையிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: சித்தேரிமேடு பகுதியில் கடந்த ஏப்.13ம் தேதி பாலசுந்தரம் என்பவரின் மகன் துரையரசன் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து துரையரசன் அளித்த புகாரின்பேரில், சித்தேரிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இரவு நேரத்தில் பாலுச்செட்டிசத்திரம் போலீசார் அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர். துரையரசனுக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகளில் வடமாநிலத்தவர்கள் தங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று துரையரசனின் மகனுக்கு பிறந்த நாள் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கருதுகிறோம். எனவே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Related Stories: