புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த விவகாரம்!: தலைமை பொறியாளர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு..!!

விழுப்புரம்: புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த விவகாரத்தில் நீர்வளத்துறை தலைமை பொறியாளரின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூரில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை திடீரென உடைந்து ஒரு மதகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக நீர்வள தலைமை பொறியாளர் அசோகன், பெண்ணை ஆறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் என்.சுரேஷ், கீழ்பெண்ணை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் எ.ஜவஹர், கீழ்பெண்ணை ஆறு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பி.சுமதி உள்ளிட்ட 4 பேரை தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைகள் விதியின் கீழ் பணியிடைநீக்கம் செய்து ஜனவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், தலைமை பொறியாளர் அசோகனின் சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்வள தலைமை பொறியாளராக இருந்த அசோகன், நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த ரவீந்திர பாபு, நீர்வளத்துறையின் தலைமை பொறியாளராக நியமனம் செய்து பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Related Stories:

>