கொரோனா பரவலால் பணியாளர்களை 50%ஆக குறைக்க தலைமைச் செயலக ஊழியர்கள் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அலுவலகத்திற்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என தலைமை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இது தொடர்பாக தலைமை செயலாளருக்கு தலைமை செயலக சங்கம் மனு அளித்துள்ளது.

அதில் 55 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 5,445 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,28,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>