×

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!: புதுவை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 1 கோடி ரூபாய் செலவில் நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1 நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், அரசு மருத்துவமனைக்கு மட்டும் பயன்படுத்தபடும் என்றும் தேவைக்கேற்ப ஆக்சிஜன் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


புதுவை அரசு  மருத்துவமனையில் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலையே இனி வராது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லியில் இருந்து மருத்துவ பொருட்களை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு இன்று காலை 2 லாரிகள் வந்தன. ஆனால் பல்வேறு காரணங்கள் கூறி மருத்துவ பொருட்களை கீழே இறக்காமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். 



Tags : Puduvai , New Government Hospital, Oxygen Production Station
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...