சுனாமி போல் தாக்கும் கொரோனா 2வது அலை : மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: மினி லாக்டவுன் வருகிறதா?

டெல்லி :  கொரோனா 2வது அலை கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். உலகின் எந்த நாட்டிலும் அளவில் இல்லாத வகையில் கொரோனா 2வது அலை இந்தியாவில் சுனாமி போல தாக்கி வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி  வரும் நிலையில், பலி எண்ணிக்கை 3500ஐ தாண்டியது. மருத்துவமனைகள் நோயாளிகளாலும் சுடுகாடுகள் கொரோனா சடலங்களாலும் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாடு என்று நாடு இதுவரை காணாத பேரிடரை சந்தித்து வருகிறது.

கொரோனா பரவலை குறைப்பது பற்றி மாநில முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பலகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் ராணுவ தளபதி நரவனேயுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராணுவம் சார்ந்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் ராணுவ தளபதி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் கொரோனா பரவலை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் காணொளி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா 2வது அலை தொடங்கியதில் இருந்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

Related Stories:

>