×

இங்கிலாந்தில் தொற்று வேகமாக குறைவு.. பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியா உச்சம் : உலகளவில் பாதிப்பு 15.10 கோடியாக உயர்வு!!

ஜெனீவா,உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.84 கோடியாக அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,84 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,10,98,853 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12,84,25,203 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 லட்சத்து 78 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 19,495,488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,622 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

*அமெரிக்காவில்  58,782 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 849 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

*பிரேசிலில் ஒரே நாளில் 69,079 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,074 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

*இந்தியாவிலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 386,829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : England ,India , கொரோனா
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...