×

கொல்கத்தாவை நசுக்கியது டெல்லி

அகமதாபாத்: ஐபில் போட்டித் தொடரின் 25வது போட்டி அகமதாபாத் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் சுப்மன்கில் 43 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ரஸல் 45 ரன்(27 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோர் மட்டுமே டெல்லி அணியின் பவுலிங்கை தாக்கு பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து, 154 ரன் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணி ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்விஷா அதிரடியாக விளையாடினார்.

அவரை கட்டுப்படுத்த முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் பிரித்விஷா 82 ரன் (41 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஷிகர்தவான் 46 ரன்(47 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரிஷப்பண்ட் 8 பந்தில் 16 ரன் எடுத்து அவுட் ஆனார். இவர்கள் மூன்று பேரின் விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் எடுத்தார். இறுதியில்  மார்க்கஸ் ஸ்டெயினிஸ் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இதனால் 16.3 ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழந்து, 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : Delhi ,Kolkata , Delhi crushed Kolkata
× RELATED டெல்லி முன்னாள் சுகாதார துறை அமைச்சர்...