கோவிஷீல்டு கேட்டு மிரட்டல் சீரம் நிறுவன சிஇஓ.க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றை போடப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆதார் பூனாவாலா. உலகளவில் பேசப்படும் முக்கிய நபராக இப்போது இவர் மாறி விட்டார். இவருடைய நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டுதான் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு இந்த நிறுவனம் எழுதிய கடிதத்திலும் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

அதில், ‘சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலாவுக்கு அடையாளம் தெரியாத அமைப்புகளிடம் இருந்தும், நபர்களிடம் இருந்தும் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மிரட்டல்கள் வருகின்றன. அதனால், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அவருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் கடந்த 16ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அனுப்பப்பட்டது. அதேபோல், இவருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உளவுத்துறைகளும் அறிக்கை அளித்துள்ளன. இதன் அடிப்படையில், இவருக்கு நாட்டில் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படும் ஓய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>