×

அகமதாபாத்தில் இன்று பெங்களூரை வெல்லுமா பஞ்சாப்?

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடக்கும் 26வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. நடப்புத் தொடரில் பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி  2வெற்றிகளை மட்டும் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான், மும்பை அணிகளை வீழ்த்திய பஞ்சாப் அணி சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் தோற்றது. ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் கெயில், மயாங்க், ஷருக்கான், தீபக், ஷமி ஆகியோர் மட்டும் வெற்றிக்காக போராடுகின்றனர். அணியில் உள்ள ஜை ரிச்சர்ட்சன், மெரிடித் ஹெட்மயர், பூரன், பேபியான், ஹென்ரிகியூஸ் என வெளிநாட்டு வீரர்களிடம் ‘ஸ்பார்க்’ இல்லை. பிஷ்னாய், அர்ஷ்தீப்  கை கொடுத்தால் பெங்களூரை வீழ்த்த முடியும்.

ஆனால் அதற்கு பெங்களூர் வாய்ப்பு அளிக்கும் சூழல் குறைவு. அந்த அணி இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில் 5ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய பெங்களூர் அணி இடையில் சென்னையிடம் வீழந்தது. கடைசியாக ஆடிய ஆட்டத்தில் டெல்லியை போராடி வென்றுள்ளது. கேப்டன் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியில் அதிரடியாக விளையாடும் டிவில்லியர்ஸ், படிக்கல், முக்கியமாக மேக்ஸ்வெல் என பலரும் கலக்குகின்றனர்.

பந்து வீச்சிலும முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், விக்கெட் எடுக்காவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அசத்துகின்றனர். அதனால் பெங்களூரை வீழ்த்த பஞ்சாப் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 7, இரண்டாவது சுற்றில் 7 என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டி உள்ளது. இந்த 2 அணிகளுக்கும் இன்றைய ஆட்டத்துடன் முதல் சுற்று முடிந்து விடுகிறது. முதல் சுற்றில் வலுவாக இருக்கும் பெங்களூரை வீழ்த்தினால், 2வது சுற்றை நம்பிக்கையுடன் பஞ்சாப் எதிர்கொள்ள முடியும்.

இதுவரை மோதியதில்...
பஞ்சாப் கிங்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஐபிஎல் தொடர்களில் இதுவரை 26ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் பஞ்சாப் 14 ஆட்டங்களிலும், பெங்களூர் 12 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் ஆட்டங்களில் மட்டுமே மோதியுள்ளன. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 2 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணியே வெற்றி வாகை சூடியது. ஆனால் 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் பெங்களூர் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரு அணிகள் மோதிய களங்களில் அதிகபட்சமாக பஞ்சாப் 232, பெங்களூர் 226ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 88, பெங்களூர் 84ரன்னிலும் சுருண்டுள்ளன.

Tags : Punjab ,Bangalore ,Ahmedabad , Will Punjab beat Bangalore today in Ahmedabad?
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்