×

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், சென்னையில் நேற்று காலமானார். இவர், கோவை தொண்டாமுத்தூர், கோவை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 90 வயதான அரங்கநாயகம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். மறைந்த அரங்கநாயகம், எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

Tags : Former minister ,Aranganayakam , Former Minister Aranganayakam has passed away
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...