வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை சரணாலயத்தில் விலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வசதி-வனச்சரக அலுவலர் தகவல்

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தட்டுப்பாடின்றி வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது என வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது.

இந்த ஆண்டு பெய்த கனமழையால் நீர் நிலைகள், குளம், குட்டைகள் மற்றும் ஏரி ஆகியவைகள் இன்றும் தண்ணீர் நிறைந்துள்ளது. வனவிலங்குகள் வறட்சி இன்றி குடிப்பதற்க்கு போதுமான அளவு தண்ணீர் சரணாலயத்தில் உள்ளது. இருப்பினும் சரணாலய உட்பகுதிகளில் ஆங்காங்கே உள்ள 25க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகளில் பைப்லைன் மூலம் தண்ணீர் நிரப்பி தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வனவிலங்குகள் குடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளின் நடமாட்டங்கள் டிராப்பிங் கேமரா மூலம் வனப்பணியாளர்கள் மூலம் கண்காணிக்கபட்டு வருகிறது.

வனவிலங்கு சரணாலயம் இரண்டாவது கொரோனா அலை காரணமாக மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் தொந்தரவுகளும் இன்றி வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. அதேபோன்று சாலை ஓரங்களில் உள்ள முனியப்பன் ஏரி, அருவங்கன்னிகுளம், தீர்த்த குளம்,

அவுலியாகனிகுளம் போன்றவைகளிலும் வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் உள்ளது. அவற்றில் வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் பருகி வருகின்றன என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Related Stories: