×

இறுதிகட்டத்தை நெறுங்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்: 35 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மேற்கு வங்கத்தில் 35 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கியது. 8-கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இறுதிகட்ட தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழகம் உள்பட 5 மாநிலகளில் வரும் மே 2-ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Tags : West Bengal Legislative Election , Final stage, West Bengal, Legislature, Election
× RELATED மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 57...