×

பனியில் உறைந்தனர் கனடா எல்லையில் இறந்த 4 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்

மெசானா: அமெரிக்கா – கனடா எல்லையில் 4 இந்தியர்கள் உட்பட 8 பேர் சடலமாக கடந்த வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல முயன்றதாக போலீசார் விசாரணையில் உறுதிபடுத்தி உள்ளனர். இவர்கள் பனியில் உறைந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பலியான 4 இந்தியர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் விஜாப்பூர் தாலுகா, மானேக்பூர் கிராமத்தை சேர்ந்த ஜசுபாய் சவுத்ரி தனது சகோதரர் பிரவீனி சவுத்ரி (50), அவரது மனைவி திக்ஷா (45), மகன் மீட் (20) மற்றும் மகள் விதி (24) ஆகியோர் சுற்றுலா விசாவில் 2 மாதங்களுக்கு முன் கனடா சென்றதாகவும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அவர்களின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளார். இதே போல, கடந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி, குஜராத்தின் காந்திநகரில் உள்ள டிங்குச்சா கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்றபோது பனில் உறைந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

The post பனியில் உறைந்தனர் கனடா எல்லையில் இறந்த 4 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Canada border ,Gujarat ,Mesana ,Indians ,US-Canada border ,Canadian border ,Dinakaran ,
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்