×

இந்தியன்-2 பட தயாரிப்பு விவகாரம்: இரு தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: நடிகர் கமல் நடிக்கும் இந்தியன்-  2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண அறிவுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், கடந்த சனிக்கிழமை இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை தயாரிப்பு நிறுவனம் தரப்பு ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. எனவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்  என்றார். இதையடுத்து, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.



Tags : Indian-2 film production issue: Bilateral talks fail: High Court information
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை