தமிழ் எழுத்தாளர் பெ.சு.மணி மறைவு

சென்னை: தமிழ் அறிஞரும், எழுத்தாளருமான பெ.சு.மணி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. பாரதி ஆய்வாளர், ராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர் குறிந்த நூல்கள், இந்திய தேசியத்தின் தோற்றமும், வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். தபால் துறை ஊழியராக பணியாற்றியவர். தமிழறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, ம.பொ.சி. நிறுவிய தமிழரசு கழகத்தில் இணைத்துக் கொண்டவர். எழுத்தாளர் பெ.சு.மணி மறைவிற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>