×

பெருமாள்பட்டு தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வைஃபை கருவி வந்ததால் பரபரப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்வி குழும வளாகத்தில் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் முடிவுகளை தெரிவிப்பதற்காக இணைய சேவைக்காக கேபிள் மூலம் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.  ஆனால், கேபிள்‌ இணைப்பு தருவதற்கு பதிலாக சென்னையிலிருந்து வைஃபை கருவி கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அந்த வைஃபை கருவியை திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால், அங்கு இருந்த திமுக வேட்பாளர்களின் முகவர்கள் வைஃபை கருவி எதற்காக கொண்டு வந்தீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று தேர்தல் ஆணையத்திற்கும்,  பத்திரிகையாளர்களுக்கும் விரைந்து முடிவுகளை அறிவிக்க ஏதுவாக கேபிள்  மூலம் இணைய சேவை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்ட நிலையில் வைஃபை கருவியை அனுப்பி வைத்ததால் அதனை அங்கு பணியில் இருந்த அதிகாரிகளே திருப்பி அனுப்பிவிட்டனர். மேலும் கேபிள் இணைப்பு தான் வேண்டும் என மீண்டும் கடிதம் கொடுத்திருப்பதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Perumalpattu , Excitement as the WiFi device came to the private college vote counting center in Perumalpattu
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு