3 லட்சம் கோவிஷீல்ட் சென்னை இன்று வருகை

சென்னை: மும்பையிலிருந்து 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு விமானம் மூலமாக கொண்டுவரப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. சில தடுப்பூசி மையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து தடுப்பூசிகளை பல்வேறு இடங்களில் இருந்து அரசு வாங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொண்டுவரப்படுகிறது. இது இன்று காலை 9.25 மணிக்கு சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>