தனியார் வேளாண்மை கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கை: ஓய்வுபெற்ற நீதிபதி தமிழக அரசிடம் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் வேளாண்மை கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த குழுவின் அறிக்கையை, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் நேற்று வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் வேளாண்மை கல்லூரிகளில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையினர் அல்லாத மாணவர் சேர்க்கைகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தலைமையில் மாணவர் சேர்க்கை குழுவை தமிழக அரசு நியமித்தது.

இதனைத் தொடர்ந்து, இணைப்பு வேளாண்மை கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று தலைமை செயலகத்தில் நேரில் அளித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்

Related Stories:

>