இலங்கை - வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

கண்டி: இலங்கை - வங்கதேச அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பல்லெகெலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தமிம் 90, நஜ்முல் 163, மோமினுல் 127, தாஸ் 50, முஷ்பிகுர் 68* ரன் விளாசினர்.

இலங்கை முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 648 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கருணரத்னே 244, திரிமன்னே 58, தனஞ்ஜெயா 166 ரன் விளாசினர். வங்கதேசம் 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் டிரா ஆனது. இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, கடைசி டெஸ்ட் அதே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

Related Stories:

>