மாட்ரிட் ஓபன் டென்னிஸ் விலகினார் ஜோகோவிச்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் டபுள்யுடிஏ மகளிர் பிரிவு ஆட்டங்கள் இன்று தொடங்கி மே 8ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஆண்கள் பிரிவு ஆட்டங்கள் மே 2ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும். நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) இந்த தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த தொடரில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், தற்போதைய சூழலில் ஸ்பெயின் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார். கடந்த வாரம் பெல்கிரேடில் நடந்த ஏடிபி போட்டியின் அரை இறுதியில் விளையாடிய ஜோகோவிச், ரஷ்யாவின் அஸ்லன் கரட்சேவிடம் போராடி தோற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>