புதுவையில் இதுவரை இல்லாத உச்சம்: ஒரே நாளில் 1,258 பேருக்கு கொரோனா தொற்று: 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி

புதுச்சேரி:  புதுவையில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 1,258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாநிலத்தில் 6,833 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 1,258 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7 பெண்கள் உட்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 56,305 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 8,444 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 632 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 47,080 ஆக உள்ளது.மொத்தம் 1,90,073 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>