கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் லட்சத்தீவு கடலில் மீட்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 11 பேர் லட்சத்தீவு கடலில் படகுடன் தத்தளித்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளனர். தேங்காய்ப்பட்டினத்தில் இருந்து கடந்த 6ம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 11 மீனவர்கள் கரை திரும்பவில்லை. 11 மீனவர்கள் கரை திரும்பாதது குறித்து இந்திய கடலோர காவல்படைக்கு தமிழக அரசு தகவல் கொடுத்தது. தொடந்து நடைபெற்ற தேடுதல் பணியில் இயந்திரம் பழுதடைந்த படகில் 11 மீனவர்களும் பத்திரமாக இருப்பது தெரியவந்த நிலையில் கடலோர காவல்படையால் மீட்கப்பட்டனர்.

Related Stories:

>